Home Page >
The Council >
About the Council >
Translation services >
Tamil
றெட்பிறிட்ஜ் கவுன்சில் ஆனது அங்கு வசிப்பவர்களுக்கு உயர்ந்த
தரமான சேவைகளை வழங்கி
றெட்பிறிட்ஜ் பகுதியை வாழ்வதற்கு சிறந்த இடமாக அமைக்கின்றது. இந்த
பறோவில் இருப்பவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட சேவைகளை நாங்கள்
பின்வருவன உள்ளடங்கலாக வழங்குகின்றோம்.
- பாடசாலைகளும் வளர்ந்தவர்களுக்கான கல்வியும்
- பிள்ளைகள் இளையவர்கள் குடும்பங்கள் ஆகியவர்களுக்கான சேவைகள்,
பிள்ளைகள் பராமரிப்பு உட்பட
- வளர்ந்தவர்களுக்கான சமூக பராமரிப்பு சேவைகள்
- நலன்புரி பணமும் நலன்புரி ஆதரவும்
- வீட்டு வசதி ஆலோசனை
- பிரஜாவுரிமை சடங்குகள்
- பிள்ளைகளின் பிறப்பு, இறப்பு,திருமணம் ஆகியவற்றை பதிவு
செய்தல்
- நூலகங்களும் விளையாட்டு நிலையங்களும்
- குப்பைகளும் மீளாக்கல் சேவைகளும்
- வாகனம் தரித்தல் சம்பந்தமான விசாரணைகளும் அனுமதிப்
பத்திரங்களும்
கவுன்சில் உறுப்பினர்கள் (Councillors)
கவுன்சிலர்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப் படுவார்கள்.
அவர்கள் சமூகத்தின் சார்பில் கவுன்சில் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்
என்பது சம்பந்தமாக முடிவு எடுப்பார்கள். உங்களுடைய உள்ளுர் கவுன்சில்
உறுப்பினர் பற்றிய தகவல்களுக்கு எங்கள் இணையத் தளத்தில் பார்க்கவும்
அல்லது 020 8708 2353 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
ஆரோக்கியம்
0845 4647ஐ அழைக்கவும் அல்லது http://www.nhs.uk/ என்ற இணையத்
தளத்தை பார்க்கவும்.
உள்ளுர் வைத்தியர்கள்,பல் வைத்தியர், கண் வைத்தியர்,மருந்தகங்கள்
NHS நடமாடும் நிலையங்கள், உள்ளுர் விபத்தும் அவசர சேவைகளுக்குமான
பிரிவு (A&E) அத்துடன் சமூக பராமரிப்பு சேவைகள்
அவசர சேவைகள்
பொலிஸ்
உண்மையாக அவசரம் எனில் 999 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
ஏனைய அவசரம் அற்ற சேவைகளுக்கு 020 8478 1123 என்ற இலக்த்தினை தயவு
செய்து அழைக்கவும்.
தீ (அவசர நிலைமை)
தயவு செய்து 999 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
ஆங்கிலம் உங்களது முதல் மொழியாக இல்லாது விடின் நேரடி
மொழிபெயர்ப்பு மற்றும் மொழி பெயர்ப்பு சேவைகள் வழங்கப்படும். அல்லது
நீங்கள் செவிடாக அல்லது கேட்பதில் குறைபாடு இருந்தாலும் இச் சேவைகள்
வழங்கப்படும்.
கீழே உள்ள ஆவணம் நீங்களாக ஆரம்பிப்பதற்கான சகல தகவல்களையும்
வழங்கும்.
(pdf ஆவணங்களை) இந்தப் பக்கத்தில் இந்த ஆவணத்தை திறப்பதற்கு அடோப்
அக்ரோபற் (Adobe Acrobat) தேவைப்படும்.
இலவசஅக்ரோபற் றீடர் மென் பொருளை தரவிறக்கம் செய்வதற்கு பின்வரும்
இணைப்பை பாவிக்கவும்.
(free Adobe Acrobat Reader software)
Download Adobe Acrobat
Reader.
மொழி
பெயர்ப்பு மற்றும் நேரடி மொழி பெயர்ப்பு பற்றிய தகவல்களைப் பெற
தரவிறக்கம் செய்யவும்.
(pdf)
உங்களுக்கு ஏதாவது கவுன்சிலின் சேவைகள் பற்றி ஏதாவது கருத்துகள்
தெரிவிக்க விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும். customer.cc@redbridge.gov.uk.
Useful websites
No information
Redbridge news
Find out about things that are happening in the borough.